கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்தது குறித்து போலீசில் புகார்
கலவையில் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்தது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா இருபரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். திருமணமாகி கர்ப்பமாக இருந்த இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்துள்ளார். இதில் குழந்தை வளர்ச்சி குறைவாக உள்ளது என்று கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் வினோத் குமார் வேலூர் அடுக்கம்பாறை அவசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் அந்தப்பெண் கலவையில் தனியாரிடம் சென்று கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெருங்கோட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் கலவை போலீஸ் நிைலயத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.