ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்
கோவையை சேர்ந்த யூ டியூப்பர் சித்ரா. இவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனமும், அதன் பெயரிலேயே யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் மதுரை சிக்கந்தர், ரவுடி பேபி சூர்யா ஆகியோர் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர் தினமும் அவரது சேனல் மூலமாக சித்ராவை கேலி செய்தும், அவரது மகளின் அந்தரங்க விஷயங்களை வெளியிடுவதாகவும், 40 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் தன்னை மிரட்டல் விடுத்த சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா, சூசைமேனி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ரா நேற்று மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதில் தான் குழந்தைகளுக்காக சேவை செய்து வருவதாகவும், யூடியூப் மூலம் ரவுடி பேபிசூர்யா, சிக்கந்தர், சாதனா இவர்கள் போடுகிற வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது. இதை தட்டிக்கேட்டால் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.