மதுவிற்பதாக கலெக்டருக்கு புகார்: பெட்டிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்'
மதுவிற்பதாக கலெக்டருக்கு புகார் வந்ததால் பெட்டிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மது விற்பதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு 'சீல்' வைக்க கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, நகராட்சி ஆணையர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.