முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தியதாக புகார்

முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-01-01 20:01 GMT

திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே அனார்பாக் தர்கா உள்ளது. இந்த தர்கா அருகே முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் (கபர்ஸ்தான்) உள்ளது. பழமையான இந்த அடக்கஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் புதர்மண்டி செடி, கொடிகள் நிறைந்துள்ளன. இந்தநிலையில் அந்த இடத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக கூறி நேற்று அதிகாலை அங்கு திரண்ட சிலர் திடீரென அடக்கஸ்தலத்தை இடித்தனர். இது பற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் இடிக்கப்பட்ட அடக்கஸ்தலத்தை உடனடியாக கட்டும்பணியில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். மேலும், அதிகாலை நேரத்தில் அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்