காலாவதியான மருந்து வழங்கியதாக புகார்

தொண்டி அரசு ஆஸ்பத்திரியில் காலாவதியான மருந்து வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-05-29 18:45 GMT

தொண்டி, 

தொண்டி அனீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலிக் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இந்த நிலையில் தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு உப்பு கரைசல் பாக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. அதை வீட்டிற்கு எடுத்து சென்று தண்ணீரில் கரைத்து குடித்து உள்ளார். அதோடு அந்த உப்பு கரைசல் பாக்கெட் காலாவதியாகி விட்டது என தெரிய வந்தது. இது குறித்து அவர் தொண்டி மருத்துவமனை டாக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார். டாக்டர்கள், இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்