'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-25 21:00 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிமெண்டு சாலை வேண்டும்

திண்டுக்கல் மாநகராட்சி 20-வது வார்டு கவடக்கார 7-வது தெருவில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கவடக்கார 7-வது தெருவில் சிமெண்டு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருப்பதி, திண்டுக்கல்.

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய், கழிவுநீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-ராஜபாண்டியன், நல்லமநாயக்கன்பட்டி.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூரில் சாலையின் இருபுறமும் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்பவர்களும் முகம் சுளித்தபடியே செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

-சண்முகம், தி.கூடலூர்.

புதர்மண்டி கிடக்கும் கோவில் வளாகம்

கம்பத்தில் உள்ள கம்பராய பெருமாள் கோவில் வளாக பகுதியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயலட்சுமி, கம்பம்.

பயன்பாடு இல்லாத சமுதாய கூடம்

கடமலைக்குண்டுவை அடுத்த சிறப்பாறை கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் சமுதாய கூடத்தை சுற்றி செடி-கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக ஏழை மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை சமுதாய கூடத்தில் நடத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே புதர்களை அகற்றி சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பொதுமக்கள், சிறப்பாறை.

குண்டும், குழியுமான சாலை

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பழனி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அடிவாரம் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசமூர்த்தி, பழனி.

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

போடியில், தேவாரம் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து போடி ரெங்கநாதபுரம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி வரையில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களால் இரவு நேரத்தில் வெளியே சென்றுவர முடியவில்லை. எனவே அப்பகுதியில் உயர் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

-கிராம மக்கள், போடி

கால்வாயை தூர்வார வேண்டும்

போடியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

-ராஜ், போடி.

சேதமடைந்த சாலை

பழனி கோர்ட்டு அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, பழனி.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்