பழையன கழிதலும்... புதியன புகுதலும்: எக்ஸ் தள பதிவுக்கு ராமதாஸ் விளக்கம்

தெலங்கானா காங்கிரஸ் அரசிடம் திமுக பாடம் கற்க வேண்டும் என்றி டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-07 10:25 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில்கூறியதாவது:-

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக, மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை என்பதாகும்.

நன்னூல் சூத்திரம் அரசியலுக்கும், கூட்டணிக்கும் பொருந்தாது. நான் பாஜகவில் இருந்து விலகவில்லை. இதில் எந்த நோக்கமும் இல்லை. சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம்

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரா, பிகார், ஒடிசா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், மராட்டியத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகியுள்ளது. திமுகவின் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. தெலங்கானா காங்கிரஸ் அரசிடம் திமுக பாடம் கற்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகமூடியை ராகுல் காந்தியும், ரேவந்த் ரெட்டியும் கழற்றியுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதல்-அமைசர் கைவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்