புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-04-30 18:45 GMT

பொதுமக்கள்  அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டணம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் கோடை காலத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் சீரான மின்வினியோகம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிஜலாலுதீன், பெரியபட்டணம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டிக்கண்மாய் பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடியில் தரைத்தளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். ஜெயராஜ், ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் மற்றும் புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இன்றி சிறிய மழைக்கு கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதார கேடாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தெருநாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 9-வது தெருவில் தெரு நாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறுகிறது. மேலும், சாலையில் செல்பவர்களையும் அச்சுறுத்துகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யோகேஸ்வரி, ராமநாதபுரம்.

பாலம் சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டணம் பகுதியில் உள்ள பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், எஸ்.பி.பட்டணம்.

Tags:    

மேலும் செய்திகள்