புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2023-04-26 20:52 GMT

குளக்கரை சீரமைக்கப்படுமா?

துவரங்காட்டில் ஒரு தனியார் பள்ளியும், அதன் எதிரே சாலையோரத்தில் ஒரு குளமும் உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் கரைப்பகுதி விரிசலடைந்து காணப்படுகிறது. அது உடைந்து விழுவதற்கு முன் குளத்தின் கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

காத்திருக்கும் ஆபத்து

மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையில் ஒரு தனியார் வாகன விற்பனை நிலையத்தின் எதிரே சாலையின் மிக அருகில் பழமையான மரம் நிற்கிறது. இந்த மரம் சாலையின் உள்பக்கமாக அதன் கிளைகள் உள்ளன. மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜாண்லின்ஜோஸ், விராலிக்காட்டுவிளை.

ஆபத்தான பள்ளம்

தோவாளை தாலுகா அருமநல்லூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த வங்கியின் எதிரில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மை.நபீலா, திட்டுவிளை.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் கோட்டார் வெள்ளாளர் தெரு முடுக்கு பகுதியில் கழிவுநீர் அடைத்து இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அய்யப்பன், இடலாக்குடி.

புதரை அகற்ற வேண்டும்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு அல் ஆல்ப்தெருவில் சாலையோரங்களில் பல இடங்களில் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதனால், அந்த புதர்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் காணப்படும் புதர்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

வாகன ஓட்டிகள் அவதி

மார்த்தாண்டம் வெட்டுமணியில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

Tags:    

மேலும் செய்திகள்