புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா தேரிருவேலி கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இந்த பகுதியில் சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், தேரிருவேலி.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
ஆக்கிரமிப்பு
ராமராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கண்மாய்களில் கருவேல மரங்களும் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கண்மாயில் நீரை சேமிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
நீச்சல் குளம் திறக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நீச்சல் குளம் கடந்த மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கிறது. எனவே இந்த நீச்சல் குளத்தை சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குடிநீர் வினியோகிக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் காவிரி கூட்டுக்குடிநீர் 2 மாதத்திற்கு மேலாகியும் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஹமதுகான், திருப்பாலைக்குடி.