தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-03-29 18:45 GMT

 குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் பழையனூர் முதல் ஓடாத்தூர் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குளியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் மிகவும் சிரமப்படுகினறனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பழையனூர், சிவகங்கை

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் சுற்றுவட்டார பகுதியில் குரங்குகள் ஊருக்குள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் விவசாயிகளின் மா, தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணா, எஸ்.புதூர், சிவகங்கை.

எரியாத தெருவிளக்குகள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் உள்ள சில தெருக்களில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதுடன் பாம்பு உள்ளிட்டவைகளும் இரவு நேரங்களில் சுற்றிதிரிகின்றன. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபாஷ், , சிங்கம்புணரி, சிவகங்கை.

அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், மடப்புரம், சிவகங்கை.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொசுக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரேசன், திருப்பத்தூர், சிவகங்கை

Tags:    

மேலும் செய்திகள்