புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-02-12 18:45 GMT

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், திருப்பத்தூர்.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருவில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துவேல், தேவகோட்டை.

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இன்னாசிமுத்து நகர் மேட்டுத்தெரு பகுதியில் சில குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை குடிக்கும் மக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சந்தான ஜோசப், மானாமதுரை.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அய்யனார்புரம் 2-தெரு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், காரைக்குடி.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பகுதிகளில் ஆங்காங்கே சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவார்களா?

பொதுமக்கள், கானாடுகாத்தான். 

Tags:    

மேலும் செய்திகள்