புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-21 18:45 GMT

ரவுண்டானா அமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ். மங்கலம் பிரியும் இடத்தில் ஒரு ரவுண்டானா அமைத்து போக்குவரத்து சமிஞ்கை விளக்குகள் ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

சேதமடைந்து வரும் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது. தற்போது இந்த பாலத்தில் மரம், செடிகள் வளர்ந்து பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே பாலம் சேதமடைவதற்குள் அதிகாரிகள் பாலத்தில் உள்ள மரம், செடிகளை அகற்றி பாலத்தை சீரமைக்க வேண்டும்.

காதர்மீரா, ராமநாதபுரம்.

கரடு முரடான சாலை

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக அம்மா உணவகம் சந்தை திடல் ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

பஸ் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவண குமார், ராமநாதபுரம்.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் பஸ் நிலையம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டணம். 

Tags:    

மேலும் செய்திகள்