தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-27 18:45 GMT

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வீரசமுத்திரம் பஞ்சாயத்து நாணல்குளம் தெற்கு தெருவில் குடிநீர் தொட்டியை சூழ்ந்து புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குடிநீர் தொட்டியை சூழ்ந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் அவசியம்

கடையநல்லூர் யூனியன் போகநல்லூர் பஞ்சாயத்து ஜெ.ஜெ.நகரில் சாலை, தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். நயினார், ஜெ.ஜெ.நகர்.

* வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டுக்கு கீழ்புறமுள்ள பாதைமறுத்தான் குட்டையன் தெரு, சேர்வாரன் தெருக்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையின் இருபுறமும் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்குள்ள பொது சுகாதார வளாகத்தின் பின்புறம் குப்பைக்கூளமாக காட்சி அளிக்கிறது. மேலும் பொது சுகாதார வளாகத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் திறந்தவெளியில் பொதுமக்கள் அசுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். முருகேசன், வாசுதேவநல்லூர்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி;

புதிய மின்பெட்டி அமைக்கப்பட்டது

கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெருவில் உள்ள மின்கம்பத்தில் சேதமடைந்த மின்பெட்டி திறந்த நிலையில் கிடப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்கம்பத்தில் சேதமடைந்த மின்பெட்டிக்கு பதிலாக புதிய மின்பெட்டி மூடியுடன் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்து வயலிமிட்டா கிராமம் மேல தெருவில் முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அதில் தண்ணீர் தேக்க முடியாததால், பல மாதங்களாக பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் அங்குள்ள குளத்துக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாமலும், சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். உள்ளமுடையார், பனையூர்

Tags:    

மேலும் செய்திகள்