தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் புதுநகர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் வடிந்து ஓட இடம் இல்லை. இதனால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துவேல், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி, புதூர், ஒத்தகடை, சர்வேயர் காலனி மற்றும் நகரின் பல்வேறு பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்த்திபன், மதுரை.
சேறும் சகதியுமான சாலை
மதுரை மாநகர் கண்ணேந்தல் சந்தனம் நகர் சாலை சேதமடைந்து மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிகரன், மதுரை.
வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாவட்டம் மகாத்மாகாந்தி நகரில் சிறிய மழைக்கு கூட சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கிநிற்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, மதுரை.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், பாண்டாங்குடி.
நடவடிக்கை தேவை
மதுரை மாநகராட்சி 72-வது வார்டு அரசிநகர் காலனி பகுதியில் மழைநீர் செல்ல இடமில்லாமல் தெரு மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. தேங்கிநிற்கும் மழைநீரால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம், மதுரை.
தெருநாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், மதுரை.
குண்டும் குழியுமான சாலை
மதுரை மாநகர் 89-வது வார்டு பாரதியார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்குவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரத்குமார், மதுரை.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாநகர் செல்லூர் பகுதி 24-வது வார்டு செல்லூர் குலமங்கலம் மெயின் ரோடு அய்யனார் கோவில் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடியானது சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரபாண்டியன், மதுரை.
பயணிகள் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறிய மழை பெய்தால் கூட மழைநீரானது தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் தேங்கிய நீரில் அதிக அளவில் கொசுக்கள் உருவாகி வருகின்றன. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மூர்த்தி, மதுரை.