'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-30 15:44 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை

ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி இந்திராகாலனியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பத்மநாபன், ஆலமரத்துப்பட்டி.

செயல்படாத செல்போன் கோபுரம்

திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் செயல்படுவதில்லை. இதனால் சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் செல்போன் கோபுரம் தொடர்ந்து செயல்படும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

-தாமஸ் அந்தோணி, கொசவப்பட்டி.

குடிநீர் குழாய் சேதம்

கொடைரோடு சடையாண்டிபுரத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் வீணாவதால் பொதுமக்களும் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

-அலெக்ஸ்குமார், சடையாண்டிபுரம்.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளம் இ.புதுக்கோட்டை அருளானந்தபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

-இலக்கியா, அருளானந்தபுரம்.

தீர்த்த தொட்டி சுத்தப்படுத்தப்படுமா?

போடியை அடுத்த கோடாங்கிபட்டியில் உள்ள விருப்பாட்சி ஆறுமுகசாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்ததொட்டியில் தண்ணீர் மாசடைந்த நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தீர்த்த தொட்டியை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிவேல்ராஜ், கோடாங்கிபட்டி.

ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வருமா?

கம்பம் நகராட்சி 4-வது வார்டு மாலையம்மாள்புரத்தில் வசிப்பவர்கள் உத்தமபுரம் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் தான் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலையம்மாள்புரத்தில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், மாலையம்மாள்புரம்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

கெங்குவார்பட்டி பேரூராட்சி தொடக்கப்பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடம் உள்ளது. அந்த வழியாக காலை, மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் நடந்துசெல்வார்கள். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். எனவே கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்செல்வன், கெங்குவார்பட்டி.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்