புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-10-23 18:31 GMT

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சியில் அக்ரகாரம் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக பழைய சாலை தோண்டப்பட்டுள்ளது. இதனால் முக்கிய வீதியான இந்த தெரு பள்ளமாகவும் மழைநீர் தேங்கி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனவே விரைவாக இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், சமயநல்லூர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சி 73-வது வார்டு காந்திஜி தெருவில் உள்ள சாலைகளில் குப்பைகள் அள்ளாமலும் கழிவுநீர் தேங்கியும் உள்ளது. தேங்கிய கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த பகுதிகளில் கொசுமருந்து அடிக்கவும் சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ், மதுரை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை நகர் வடக்கு தெரு 25-வது வார்டு மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின்ரோடு, ஜீவா தெரு, வ.உ.சி. முதல்தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், மதுரை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 4-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடையும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமீர்அப்பாஸ், உசிலம்பட்டி

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் அரசரடி சிக்னல் அருகில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேம், அரசரடி.

ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டம் கூடல் நகர் 2-வது தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெயக்குமார், கூடல்நகர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா த. அய்யன் கோட்டை வங்கி பின்புறம் உள்ள தெருவில் மழை நீர் தேங்கி வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.பரணிக்குமார், த. அய்யன்கோட்டை.

சமுதாயக்கூடம் வேண்டும்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு மணவாளன் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இங்கே பொதுமக்கள் பயன்படுத்த சரியான முறையில் சமுதாய கூடம் இல்லை. எனவே இங்கே மக்கள் பயன்படுத்த சமுதாய கூடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

விபத்துகளை ஏற்படுத்தும் பள்ளங்கள்

மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி 120 அடி மெயின் ரோட்டிலிருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் நுழைவுப் பகுதி வரை உள்ள சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களினால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், சர்வேயர் காலனி, மதுரை.

ஆற்றில் கிடக்கும் குழாய்கள்

மதுரை வைகை ஆறு காமராஜர் பாலத்தின் கீழ்ப்பகுதி - வைகை ஆறு வடகரை நான்கு வழிச்சந்திக்கும் இடத்தில் பல நாட்களாக பெரிய சிமெண்டு குழாய்கள் தண்ணீரில் வீணாக கிடக்கிறது. எனவே இந்த குழாய்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்