புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-23 18:45 GMT

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தி வருவதுடன் கடிக்கவும் செய்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பிடார்நந்தன் கிராமத்தில் பள்ளி மற்றும் கோவில் அருகில் சிலர் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த வெளியில் மது அருந்துவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமடைந்த மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணியங்காடு ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ் தேவை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கிட வேண்டும்.

பொதுமக்கள் அச்சம்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்குளம் வடக்குதெரு, மேலதெரு, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்