புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-10-05 20:13 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாகும் மின்சாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அதிகாலை நேரம் கடந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையில்லாமல் நேரம் கடந்து ஒளிரும் மின்விளக்குகளை கவனித்து அதனை அணைத்து வைக்க வேண்டும்.

சுந்தரி சுப்ரமணியன், மதுரை.

ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டம் தெற்கு மாரட் வீதியின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இதனால் இந்த சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி வருகிறார்கள். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், மதுரை.

வாகன ஓட்டிகள் சிரமம்

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி 4-வது வார்டு ஆனையூர் அருகே கோசாகுளம், பெரியார் நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையானது மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், ஆனையூர்.

கழிவுகள் அகற்றப்படுமா?

மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர், எம்.ஜி.ஆர். தெருவில் சாக்கடையில் அள்ளிய குப்பைகளை அப்படியே போட்டுவிடுகின்றனர். இதனால் சாலை சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை அவ்வப்போது அள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரநாத், வில்லாபுரம்.

பாலப்பணி நிறைவடையுமா?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ரெயில்வே பாலம் கட்டும் பணியானது டி.வி.எஸ். நகர் பகுதியில் முடிவடைந்தும் ஜெய்ஹந்த்புரம் பகுதியில் பணி முடிவடையாமலும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலகுரு, திருப்பரங்குன்றம்.

சேதமடைந்த சாலை

மதுரை 4-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம் அன்புநகர் மெயின்ரோட்டில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிக்கந்கர், மதுரை.

பஸ் நின்று செல்லுமா?

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ் நிறுத்தத்திற்கு தினந்தோறும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் ஒருசில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் மற்ற பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்.

பெருமாள், மேலூர்

சேறும், சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் செல்லூர்-குலமங்கலம் ரோடு சாலையின் இருபுறமும் மழை காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழும் அபாயமும் உள்ளது. ஆகவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், செல்லூர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரை பழைய கீழ்மதுரை ரெயில்வே நிலைய ரோடு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சிநாத், பழைய கீழ்மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்