புதிய நிழற்குடை வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சத்திரக்குடி பிரதான சாலையில் கருங்கலக்குறிச்சி- சூரங்குளம் பிரிவில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் குடிநீர் வினியோகிக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் சோமநாதபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தடையற்ற குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜார் பகுதியில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கிய கழிவுநீரால் சாலை சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிப்பறை வசதி வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு இலவச கழிப்பறை வசதி இல்லை. இதனால் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஏழை மக்கள் பயன்படும் வகையில் இலவச கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொல்லை தரும் நாய்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.