புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-30 18:45 GMT

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் கொசுத்தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இரவில் கொசுக்கடியால் தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி பஞ்சாயத்தில் கலைமணிநகர் தெருக்களில் சாலை வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மின்வாரியத்தின் பின்புறத்தில் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?

தெருநாய்கள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெண்களும், சிறுவர்களும் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்தும் போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்துவார்களா?

Tags:    

மேலும் செய்திகள்