புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-09-21 18:45 GMT

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் அவ்வப்போது சிறு சிறு பழுதுகளை சந்தித்து வருகிறது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் சாலையில் செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் நின்று கொண்டு வாகனங்களுக்கு வழிவிடாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை வசதி தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை யூனியன் இலுப்பக்குடி பஞ்சாயத்தில் கலைமணிநகர் 6-வது தெரு முதல் 12-வது தெரு வரை பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்புச்சுவர் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா காஞ்சிரங்குளம் கிராமத்தில் கருப்புச்சாமி கோவில் அருகில் உள்ள மடையில் சுமார் 150 அடி நீளத்திற்கு வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் இருபுறங்களிலும் சுமார் ஆறு அடி உயரத்திற்கு மேடாக உள்ளது. இதனால் இரு புறங்களிலிருந்து மண் சரிந்து வாய்க்கால் மூடிவிடுகிறது. இதனால் தண்ணீர் தடைபடுகிறது. எனவே வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்