புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறைந்தழுத்த மின்வினியோகம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரமானது வினியோகிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த், இளையான்குடி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒய்யவந்தான், பேச்சாத்தகுடி கிராமத்தில் உள்ள சாலைகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாத நிலையில் நாய்கள் துரத்துகின்றன. மேலும் இரவுநேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாதவாறு சத்தம் எழுப்புகின்றன. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
முருகன் செல்வம், காளையார்கோவில்.
அடிப்படை வசதி தேவை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அழகர்சாமி நகர், ஆதிதிராவிடர் நகர் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகள்செய்து கொடுக்க வேண்டும்.
கருப்பையா, காளையார்கோவில்.
தார்சாலை வேண்டும்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரும்பாலை கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை விபத்திற்குள்ளாக்கி வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோடாக உள்ள சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.
கண்ணன், இளையான்குடி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சந்துரு, கல்லல்.