சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் வங்கி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
முகமது சலீம், புதுமடம்.
சாலையை சீரமைப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து வேங்கிட்டன்குறிச்சி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பரமக்குடி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சாலையில் சுற்றி திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆர்.எஸ். மங்கலம்.
கசியும் கழிவுநீர்
ராமநாதபுரம் நகராட்சி 1- வது வார்டில் பாதாள சாக்கடை மூடியில் இருந்து நாள்தோறும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு, தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே இதை நிரந்தரமாக சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வேந்திரன், ராமநாதபுரம்.
விவசாயிகள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ். காவனூர் கிராமத்தின் அருகில் உள்ள வெங்கிட்டன் குறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயில் அளவிற்கு அதிகமாக மழைநீர் மற்றும் ஆற்று நீரை சேமிப்பதன் மூலம் எஸ். காவனூர் கிராமவிசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி, எஸ்.காவனூர்.