தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்று நோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 9-வது வார்டு பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் குப்பைகள், கழிவுகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்சன், செட்டியார்பட்டி.
மாணவர்கள் அவதி
விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கி வரும்பள்ளி நுழைவுவாயில் பகுதியில் மழை காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதியடைகின்றனர். மேலும் கழிவுநீரில் நடப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்த ராஜ், விருதுநகர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம் கிராமத்தில் குப்பைகள் அகற்றப்படாமலேயே கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இங்கு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை பேண வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகேஷ், தேவதானம்.
கால்நடைகளால் இடையூறு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடைபாதையினருக்கும் கால்நடைகளால் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமர், ராஜபாளையம்.
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகரின் முக்கிய சாலைகளான ரெயில்வே பீடர் ரோடு, புல்லலக்ேகாட்டை ரோடு, அல்லம்பட்டி ரோடு ஆகியவை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவராஜ், விருதுநகர்.