புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-23 17:50 GMT

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் கால்நடை மற்றும் நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையை மறித்து கொண்டு உறங்குவதால் விபத்து அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?

ராமன், பள்ளத்தூர்.

கால்நடை மருத்துவமனை தேவை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பணங்குடி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை வசதி கிடையாது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சைக்காக பலகிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

சிரஸ்பாண்டி, பணங்குடி.

பயன்பாடற்ற நுழைவுவாயில்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்செல்லும் 2 நுழைவு வாயிலில் ஒன்று மட்டுமே பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு உள்ளே வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 2 கேட்டையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

பழனிவேல், திருப்பத்தூர்.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து கழனிவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.

அம்ஷாமேரி, காரைக்குடி.

தார்சாலை வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி ஊராட்சி சாலைகள் மண் சாலையாக காட்சியளிக்கின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

எம்.தேவதாஸ், சிங்கம்புணரி.

Tags:    

மேலும் செய்திகள்