புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
சாலை சரிசெய்யப்படுமா?
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சிவசண்முகவேல், எஸ்.புதூர்.
சேதமடைந்த மின்கம்பங்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தில் உடைந்து விழும் நிலையில் மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகினறனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இந்த மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைக்கொழுந்து, காரைக்குடி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றிதிரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் சிலரை கடித்தும் வைக்கிறது. மேலும் வாகனங்களின் மீது மோதுவதால் விபத்துக்களும் நடக்கிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மானாமதுரை.
கழிவுநீர் கால்வாய் வேண்டும்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி வார்டு எண் 11-ல் மழைநீர் செல்ல வழி இல்லை. இதனால் மழை காலங்களில் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்குகின்றது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் மழைநீர் வடிந்து செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
கார்த்திகேயன், இளையான்குடி.
கண்மாய் மடை சீரமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கூடஞ்சாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் உள்ள கண்மாயின் மடையானது சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் விவசாயிகள் விவசாய தேவைக்கு நீரை சேமிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கண்மாய் மடையை சரிசெய்ய வேண்டும்.
செல்வக்குமார், கூடஞ்சாடி.