புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

Update: 2022-08-14 17:26 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் நாராயண சுவாமி கோவில் தெருவில் முறையாக வாறுகால் அமைக்கப்படாததால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை சுத்தம் செய்து வாறுகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சந்திரசேகா், மருதம்புத்தூர்.

மின்விளக்குகள் எரியவில்லை

சிவகிரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த நான்கு மாத காலமாக எரியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் இருளில் சிரமப்படுகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஈஸ்வரன், சிவகிரி.

* கடையம் மெயின் பஜாரில் இருந்து மாட்டுச்சந்தை அருகில் வரை கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்குமரன், கடையம்.

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்குமா?

தமிழகத்தில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள குறுகிய சாலை வழியாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் செங்கோட்டையில் இருந்து புளியரை சோதனை சாவடி வரை நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை செங்கோட்டைக்குள் வராமல் இலத்தூர் வழியாக கேரளா செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கனியமுதன், செங்கோட்டை.

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் வசதியின்றியும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கொண்டலூர்.

Tags:    

மேலும் செய்திகள்