புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-11 18:33 GMT

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது.. இதனால் வாகன ஓட்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்சன், தேவகோட்ைட.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பலர் தினமும் நாய்கடிக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இளையான்குடி.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தற்போது சாலை விரிவாக்கம் பணி நிறைவு பெற்ற நிலையில் சாலையோரத்தின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் நலனிகருதி சாலை சீரமைக்கப்படுமா?

சித்ரா, காரைக்குடி.

பயன்பாட்டுக்கு வருமா?

சிவகங்கை மாவட்டம் ஒ.புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதாகி காணப்படுகிறது. இந்த பழுதை சரிசெய்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிக்குமார், சிவகங்கை.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணன் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூமிநாதன், காரைக்குடி.


Tags:    

மேலும் செய்திகள்