தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-08-10 17:31 GMT

வேகத்தடை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் சோதனை சாவடி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை குறைக்க வேண்டும்.

பொதுமக்கள், பட்டணம்காத்தான்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் சுவாமி விவேகானந்தர் சாலையில் புதிதாக போடப்பட்டுள்ள சாலை அரசின் விதிமுறைகளை பின்பற்றி முறையாக போடப்படவில்லை. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்வர்தீன், ராமநாதபுரம்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தூரணி கரையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த கருவேல மரங்களை அகற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காதர் மீரா, ஆர்.எஸ். மங்கலம்.

அடிக்கடி பழுதாகும் ஏ.டி.எம். எந்திரம்

ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கம் கிராமத்தில் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை 15 -க்கும் மேற்பட்ட ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுதாவதால் இங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பணம் எடுக்க பல கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுதாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், சேரந்தை.

மின்விளக்கு வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்குத்தெருவில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அங்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகளை அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், மண்டபம்.

Tags:    

மேலும் செய்திகள்