தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்கள் பகுதி குறைகளை கியூஆர் கோடு மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

Update: 2022-07-24 18:57 GMT

புதிய பாலம் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தர்மாசனம்பட்டி கிராமத்தில் உள்ள தரைபாலத்தின் மேற்பரப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலம் தரைமட்டமாக காணப் படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துவிடுகிறது. மேலும் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்கவும், கண்மாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், மேலூர்.

மோசமான சாலை

மதுரை மாநகர் 2- வது வார்டு கூடல்புதூர் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் இந்த சாலை வழியே நடந்து செல்ல முடியாமல் அவதிஅடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருசாமி, கூடல்புதூர்.

ஒளிராத விளக்குகள்

மதுரை மாநகர் யானைக்கல் பாலத்தின் அருகே உள்ள விக்டர் பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. வாகனங்கள் அதிகம் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகளை பழுதுபார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் வரும் மக்களை பயமுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? மணிகண்டன், அவனியாபுரம்.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாநகர் கோரிப்பாளையத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையின் இருபுறமும் ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் ஆம்புலன்சு போன்ற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கோரிப்பாளையம்.

Tags:    

மேலும் செய்திகள்