புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-07-10 15:54 GMT

நடவடிக்கை எடுக்கப்படுமா?

குமரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் கோவில், ஆலய வழிபாடுகளில் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள முதியவர்கள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, முதியவர்கள் நலன் கருதி விழாக்கள் மற்றும் கோவில் வழிபாடுகளில் அதிக சத்தம் கொண்ட ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டணி, நாகர்கோவில்.

பராமரிப்பு தேவை

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தின் முகப்பு பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலகத்தின் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் வைக்கப்பட்டள்ள சுவற்றின் அருகே அலங்கார செடிகள் அமைக்கப்படுள்ளது. ஆனால், அந்த செடிகள் முறையாக பராமரிக்கப்படாமல் புதர்போல் காட்சி அளிப்பதுடன் அலுவலக பாதாகைகளையும் மறைக்கிறது. எனவே, செடிகளை சீரமைத்து அழகு படுத்தி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அவை வாகனங்கள் வரும்போது திடீரென சாலையின் நடுவே வருகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் மாடுகளின் நடமாட்டத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.ராஜாராம், மறவன்குடியிருப்பு.

விபத்து அபாயம்

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் தோட்டியோட்டில் இருந்து வில்லுக்குறி வரை இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்து நடைபெறுவதை தடுக்க வேண்டும்.

-மணிகண்டன், வில்லுக்குறி.

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் கோட்டார் பெரியவிளையில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் முன் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் சமபந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பெரியவிளை.

Tags:    

மேலும் செய்திகள்