புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-07-07 15:47 GMT

மின்கம்பம் சீரமைக்கப்பட்டது

ஐரேனிபுரம் பகுதியில் வயக்கவிளை தெற்குகரை செல்லும் சாலையில் கால்வாய் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் காணப்பட்ட மின்கம்பத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார சீர்கேடு

வடசேரி ஆராட்டு ரோட்டில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் இரவு நேரம் சிலர் மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தா.சக்திவேல், வடசேரி.

சேதமடைந்த சாலை

வெள்ளிமலை ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்விளையில் இருந்து கோட்டவிளை செல்லும் சாலையில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.ஜாண் ஜெனின், கோட்டவிளை.

தரம் உயர்த்தப்படுமா?

குளச்சல் பகுதியில் மூன்று அரசு பள்ளிகள் உள்ளன. இலப்பவிளையில் 10-ம் வகுப்பு வரையும், செக்கால தெருவில் 5-ம் வகுப்பு வரை பெண்கள் தொடக்கப்பள்ளியும், அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தான் உள்ளது. மேல்நிலைப்பள்ளிகள் இல்லை. இதனால், பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பதற்கு அந்த பகுதி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலன்கருதி அரசு நடுநிலைப்பள்ளியை பிளஸ்-2 வரை தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது ஆதில், குளச்சல்.

வாகன ஓட்டிகள் அவதி

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளி ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. திருமணத்துக்கு வருபவர்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். இதனால், அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்சு வாகனங்களும் சிக்கி வருகின்றது. எனவே, அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், குளச்சல்.

சீரான மின்வினியோகம் தேவை

மயிலாடி பகுதியில் இரவு நேரம் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மின்தடையை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், மயிலாடி.

சாலை சீரமைக்கப்படுமா?

ஆடராவிளை சந்திப்பில் இருந்து மேல்ஆடராவிளை சட்டுவம்தோப்பு வழியாக எள்ளுவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.

Tags:    

மேலும் செய்திகள்