'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே மயிலாடுதுறை செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் இறக்கத்தில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. ஏதேனும் வாகனங்கள் சென்றால் உரசும் அளவில் மின் கம்பிகள் இறங்கி உள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கைநீட்டி தொடும் அளவில் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உயரத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பேரளம்.