புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2022-06-21 17:23 GMT

மின்விளக்கு அமைக்கப்பட்டது

நாகர்கோவிலில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையம் அருகில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், இரவு நேரம் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திடக்கழிவு மேலாண்மை மையத்தின் அருகில் மின்விளக்கு அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

எரியாத விளக்கு

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட அண்ணா சிலை அருகில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விளக்கு சீராக எரிவது இல்லை. மேலும், கம்பத்தின் அருகில் நிற்கும் மரங்களின் கிளை விளக்கின் ஒளியை மறைக்கும்படி உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கம்பத்தில் புதிய விளக்கை பொருத்தி ,வெளிச்சத்தை மறைக்கும் கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாஹீர், குளச்சல்.

சாலை சீரமைக்கப்படுமா?

குருந்தன்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மூங்கில்விளையில் இருந்து கோட்டவிளை செல்லும் சாலைஉள்ளது. இந்த சாலையில் அரசு பள்ளி உள்ள பகுதிமிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெ.ஜாண் ஜெனின், கோட்டவிளை.

சுற்றுலா பயணிகள் அவதி

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் ஏராளமான மனநோயாளிகள் பொது இடங்களில் சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு சுற்றித்திரிபவர்கள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி மனநோயாரிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, சைமன்நகர், நாகர்கோவில்.

வழிகாட்டு பலகை தேவை

தேரூரில் தற்போது பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வாகனங்கள் அனைத்தும் புதுக்கிராமம் வழியா இயக்கப்படுகிறது. புதுக்கிராமம் பெருமாள் கோவில் பின்புறம் 3 சாலைகள் சந்திக்கும் பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வந்ததும் வழி தெரியாமல் தவிப்புக்குள்ளாகின்றனர். எனவே, அந்த பகுதியில் வழிகாட்டு பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சு.சுப்பிரமணியபிள்ளை, புதுக்கிராமம்.

சீரமைக்க வேண்டும்

குளப்புறம் ஊராட்சிக்குட்பட்ட குளப்புறம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தின் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராமான குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, இந்த மையத்தின் ஜன்னல்கள், கதவுகள் பழுதடைந்து காணப்படுகிறது. ேமலும், கட்டிடத்தின் பல இடங்களில் செடிகள் வளர்ந்து சேதமடைந்தும், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டும் காணப்படுகிறது. எனவே, குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரிஜி, முன்சிறை.

சிமெண்டு சிலாப்பு அமைப்பார்களா?

திக்கணங்கோட்டில் 4 முனை சந்திப்பு பகுதி உள்ளது.இந்த பகுதியில் நாகர்கோவில் செல்லும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிழற்குடைக்கும் சாலைக்கும் இடையே மழைநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகள் நிலைதடுமாறி ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அமுதா நிர்மல்,கட்டப்புளி,

Tags:    

மேலும் செய்திகள்