புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-06-11 20:35 GMT

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும்-குழியுமான சாலை

மதுரை மாநகர் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஒருசில இடங்களில் உள்ள சாலைகள் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளங்களில் சிக்கி வாகனங்கள் பழுதாகும் நிலை உள்ளதுடன், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே நகரின் பல்வேறு பகுதியில் உள்ள குண்டும்-குழியுமான சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயக்குமார், திருமங்கலம்.

அடிப்படை வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ராமநாதபுரம்.

போக்குவரத்துக்கு இடையூறு

சிவகங்கை பஸ் நிலையம் அருகில் வாகனஓட்டிகள் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாத வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் நடக்க பாதையின்றி பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முரளி, சிவகங்கை.

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட பந்தல்குடியில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீர் விவசாயத்திற்கும், இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த கண்மாயில் சிலர் குப்பைகளை அதிக அளவில் கொட்டுகின்றனர். இதனால் கண்மாயில் நீர்வளங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்மாயில் குவிந்த குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், விருதுநகர்.

பயணிகள் நிழற்குடை தேவை

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இ்ந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பதால் சிரமம் அடைகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிப்பதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் இருசக்கர வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், கல்லல்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கையிலிருந்து மானாமதுரைக்கு ஏராளமானோர் பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்புகளுக்காக தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் இயக்கப்படும் பஸ் போதுமானதாக இல்லை. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாவதால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகளின் அன்றாட வேலை பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முனியசாமி, சிவகங்கை.

தொற்றுநோய் அபாயம்

மதுரை மாவட்டம் வில்லாபுரம் 86-வது வார்டு பள்ளர் கிழக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகின்றது. தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியை கடந்து செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வசந்த், மதுரை.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அம்மாபட்டி கிராமத்தில் நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டி இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது இந்த நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சேமிக்க முடியாத வகையில் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றது. தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. எனவே நீர்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பரமராஜ், அம்மாபட்டி.

Tags:    

மேலும் செய்திகள்