'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவு வருமாறு:-
மயிலாடுதுறை:-
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவு வருமாறு:-
தெரு விளக்குகள் ஒளிருமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் கோவிலை சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் ஆற்றங்கரை செல்லும் வழியில் உள்ள தெரு விளக்குகளில் விளக்குகள் ஒளிர்வது இல்லை. இதனால் பொதுமக்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடப்பதால் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குகள் ஒளிர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், திருமணஞ்சேரி.