குண்டும், குழியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் வடகரை கிராமம் மெயின் ரோட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுமையாக அமைக்கப்படாமல் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.