புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையை சீரமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் ஊருணிக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் ஊருணி அருகில் உள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், முதுகுளத்தூர்.
கழிப்பறை வசதி வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் தலைமை தபால் நிலையத்தை அடுத்துள்ள பகுதியில் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தினமும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர். கழிப்பறை வசதியில்லாததால் இங்கு வரும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிப்பறை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் நாடார்வலசை பகுதிசாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், அழகன்குளம்.
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் குமாரக்குறிச்சி காலனி பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் வசிக்கும் வீட்டிற்குள் விஷ பூச்சிகள் அதிகமாக வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முதுகுளத்தூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-பரமக்குடி அருகே புதுநகரில் 8-வது மேற்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தெற்றுநொய பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுநகர்.