புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-08-30 18:45 GMT

சாலை அமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பனஞ்சாயல் ஊராட்சி அடஞ்சாமங்கலம் கிராமத்திற்கு செல்லும் சாலை மண்சாலையாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் இவ்வழியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பனஞ்சாயல்.

தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் கடலாடி பஸ் நிலையம் முதல் தாலுகா அலுவலகம் வரை சில இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது அலி, கடலாடி.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்க்கடிக்கு பலரும் ஆளாகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், முதுகுளத்தூர்.

படிக்கட்டுகள் சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்த குளம் அப்பகுதி பொதுமக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தின் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே படிக்கட்டுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வண்ணாங்குன்டு.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் கோடனூர் ஊராட்சி பிள்ளையாரேந்தல் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் குறைந்த அழுத்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே சீரான மின்வினியோகம் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, கோடனூர். 

Tags:    

மேலும் செய்திகள்