புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-05 18:45 GMT

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மணிகண்டன், பரமக்குடி.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராமநாதபுரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனஓட்டிகள் சிலர் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் நடைபாதையினர், பிற வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பறிமுதல் செய்து அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

செல்வா, ராமநாதபுரம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் நகரில் பிரதானமான மதுரை ரோடு-சாலை தெரு சந்திப்பில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

எரியாத தெருவிளக்கு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகர் 3-வது வார்டு பகுதியில் சிவன்கோவில் கிழக்கு ரத வீதி, பானுமதி நாச்சியார் தெரு, அரண்மனை தெற்கு தெரு, விவேகானந்தர் தெரு பகுதிகளில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோகரன், ராமேசுவரம்.

மாணவ, மாணவிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வகுப்பறைகளில் மின் விசிறி வசதி இல்லை. இதனால் வெயில் காலங்களில் மாணவர்கள் சரும பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே வகுப்பறையில் மின்விசிறி வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஹமதுகான், திருப்பாலைக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்