'ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம்'திருமணம் செய்வதாக கூறி ரூ.3½ கோடி மோசடிஇளம்பெண் குறித்து மெக்கானிக் பரபரப்பு புகார்

Update: 2023-09-04 19:30 GMT

தர்மபுரி:

ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம். அப்படி இருந்தும் திருமணம் செய்வதாக கூறி ரூ.3½ கோடி மோசடி செய்த ெபண் குறித்து மெக்கானிக் கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

திருமண ஆசை

தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜான் (வயது45). ஏ.சி.மெக்கானிக். இவர் நேற்று தனது மகன், மகளுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் தர்மபுரியில் எனது மகன் ஜோஸ்வா, மகள் ஜெருஷா ஆகியோருடன் வசித்து வருகிறேன். தர்மபுரி நகரில் எனக்கு சொந்தமாக வீடு, கடைகள் உள்ளன. அதில் வரும் வாடகையில் பிழைத்து வந்தேன். எனக்கும் எனது மனைவி ஷீபாக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம்.

எனது உறவினர் ஒருவர் மூலம் பன்னிகுளத்தை சேர்ந்த ஒரு பெண் அறிமுகம் ஆனார். அவர் எனது சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்த ஒரு வங்கியில் கடன் பெற்று நர்சரி கார்டன் தொழில் தொடங்க உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். தனக்கு வங்கி மேலாளரிடம் கடன் பெற்று தரக்கோரி உதவி கேட்டார் நானும் வங்கி மேலாளரிடம் கூறி அவருக்கு வங்கி கடன் வாங்க உதவினேன்.

திருமணம் செய்வதாக...

இதன் மூலம் நானும், அந்த பெண்ணும் பழகி வந்தோம். சிறிது காலத்திற்கு பின்னர் நானும் அவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். நானும் அந்த பெண் மற்றும் அவரது மகன்கள் ஆகிய 4 பேரும் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தோம். இந்த நிலையில் எனக்கு பாகமாக முன்னோர் சொத்து கிடைத்தது. அதை விற்பனை செய்ததில் என்னிடம் பணம் இருந்தது. இதை அறிந்த அந்த பெண் மற்றும் அவர்களது மகன்கள் இருவரும் கூறியதன் பேரில் நாங்கள் கோயமுத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தோம். மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் 1.05 ஏக்கர் நிலம் அந்த பெண்ணின் பெயரில் வாங்கி கொடுத்தேன். மேலும் நகைகள், கார் போன்றவையும் வாங்கி கொடுத்துள்ளேன். கடைசி வரை அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார்.

நடவடிக்கை

பின்னர் அங்கிருந்து போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நாங்கள் இடம் மாறி குடியிருந்து வந்தோம். எனது பெயரில் தர்மபுரியில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என அந்த பெண்ணும், அவரது மகன்களும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதனால் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பியோடி தர்மபுரிக்கு வந்துவிட்டேன். என்னை ஏமாற்றி வாங்கி கொண்ட 40 பவுன் நகைகள் மற்றும் அபகரித்த ரூ.3.5 கோடி சொத்துக்களை மீட்டு தர வேண்டும். திருமண ஆசை காட்டி மோசடி செய்த அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்