சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக புகார்

சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக புகார்

Update: 2022-06-23 10:21 GMT

அவினாசி

அவினாசி பேரூராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட், தள்ளுவண்டி கடைகள், ரோட்டோர கடைகள், என ஏராளமான கடைகளும், தலை சுமை வியாபாரிகளும் உள்ளனர். இந்த வியாரிகளிடம் தினசரி சுங்க வசூலுக்க பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டு குத்தகைதாரர் ஏலம் எடுத்துள்ளார். பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த தொகைக்கு மேல் பல மடங்கு கூடுதலாக சுங்க தார் வசூலிப்பதாக வியாபரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் நாங்கள் சுங்க தொகை செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். தினசரி சுங்கம் வசூல் செய்பவர் சுங்க தொகையை காட்டிலும் பல மடங்கு அதிக தொகை வசூலிக்கிறார்.அதற்கு ரசீதும் தருவதில்லை. கேட்டால் அப்படித்தான் உன்னால் ஆனதை பார்த்து கொள் என்கிறார். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்