வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்3-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர்
வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்3-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் எம்.பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் வன உயிரின வார விழா நடைபெற உள்ளது. அதையொட்டி 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9 முதல் 12-ம் வகுப்புவரை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வன உயிரினங்களுக்கு மதிப்பளித்தல் என்ணு தலைப்பில் ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி திருப்பத்தூர் ெரயில் நிலைய சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ்கிடிஜாலா ஆகியோர் பரிசுகள் வழங்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.