பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2023-06-16 18:45 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி, வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட சன்மார்க்க சங்கம் ஆகியவற்றின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உள்ள மரகதவல்லி தாயார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வள்ளலார் குறித்த பேச்சு போட்டி, பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்பிரமணியம் சகுந்தலா மண்டபத்தில் நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்