பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள்
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தது.
சிறுசேமிப்பு துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், உலக சிக்கன நாள் விழாவையொட்டி பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் நேற்று நடந்தது. சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்த்திடும் பொருட்டு கட்டுரை, கவிதை, சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு சொற்றொடர்கள், வினாடி வினா மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வினாடி-வினா போட்டியில் 42 பேரும், கவிதை போட்டியில் 53 பேரும், சொற்றொடர் போட்டியில் 53 பேரும், பேச்சு போட்டியில் 62 பேரும் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விரைவில் நடக்க உள்ள உலக சிக்கன நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.