பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

Update: 2022-10-03 15:49 GMT

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல்வாரம் வனஉயிரின வாரவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி-வினா, ஓவியப்போட்டிகள் 4 பிரிவுகளாக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா பள்ளி தலைமையாசிரியர் நெப்போலியன், வனச்சரக அலுவலர்கள் முருகன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் என்.ரமேஷ், துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்