மாணவர்களுக்கான கவிதை போட்டி
மாணவர்களுக்கான கவிதை போட்டி இன்று நடக்கிறது.
காரைக்குடி,
காரைக்குடியில் புத்தக கண்காட்சியையொட்டி நேற்று காலைமாணவர்களுக்கான கவிதை போட்டி மாணவர்கள் பங்கேற்ற ஓவிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுக்கான கவிதைப்போட்டி நடைபெறுகிறது. அதன்படி காலை 11 மணிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாசிப்பால் சிறகுகளை விரிப்போம் என்ற தலைப்பிலும், 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பின்றி அமையாது உலகு என்ற தலைப்பிலும், பிற்பகல் 3 மணிக்கு 11 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு என்னை செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு உலகை உலுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும் கவிதைப்போட்டி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.