பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை

Update: 2023-04-05 18:45 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஹெல்லி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதேபோன்று செல்வபுரம் பகுதியில் 7 மாத கன்று குட்டியை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள் ரவிக்குமார், காணிக்கமேரி ஆகியோருக்கு ஓவேலி சரக வனத்துறை சார்பில் நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, பாதிக்கப்பட்ட ரவிக்குமாருக்கு ரூ.11 ஆயிரம் மற்றும் காணிக்கமேரிக்கு ரூ.15 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வனவர்கள் சுதிர்குமார், சுபேத்குமார் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்