மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது

Update: 2022-09-28 18:45 GMT

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மற்றும் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆகவே, மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீடு திட்டம் வழங்க இயலாது என கூறுவது ஏற்புடையதல்ல. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். முதியோர்களுக்கு ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் மாதம் 10-ந் தேதி தமிழகம் முழுவதும் விவசாய தொழிலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்